ஆக்கி இந்தியா லீக்: தமிழ்நாடு டிராகன்ஸ் ‘ஹாட்ரிக்’ வெற்றி


ஆக்கி இந்தியா லீக்: தமிழ்நாடு டிராகன்ஸ் ‘ஹாட்ரிக்’ வெற்றி
x

இந்த ஆட்டம் வழக்கமான நேரம் முடிவில் 4-4 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

சென்னை,

8 அணிகள் இடையிலான 7-வது ஆக்கி இந்தியா லீக் போட்டி தொடரின் முதல் கட்ட ஆட்டங்கள் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் கடந்த 3-ந் தேதி தொடங்கி நடந்து வந்தது. இதில் நேற்று இரவு நடந்த 10-வது லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ்-எஸ்.ஜி.பைப்பர்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நகர்ந்த இந்த ஆட்டம் வழக்கமான நேரம் முடிவில் 4-4 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

இதையடுத்து வெற்றியை முடிவு செய்ய நடந்த பெனால்டி ஷூட்டில் தமிழ்நாடு டிராகன்ஸ் 5-4 என்ற கோல் கணக்கில் பைப்பர்சை வீழ்த்தி தொடர்ச்சியாக 3-வது வெற்றியை பெற்றது.

1 More update

Next Story