மகளிர் ஆசிய கோப்பை ஆக்கி: சூப்பர் சுற்றில் சீனாவிடம் இந்திய அணி தோல்வி


மகளிர் ஆசிய கோப்பை ஆக்கி: சூப்பர்  சுற்றில் சீனாவிடம் இந்திய அணி தோல்வி
x

image courtesy:twitter/@TheHockeyIndia

இந்திய அணி தனது கடைசி சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் ஜப்பானுடன் மோத உள்ளது.

ஹாங்சோவ்,

11-வது மகளிர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதன் லீக் சுற்று முடிவில் சீனா, தென் கொரியா, இந்தியா, ஜப்பான் அணிகள் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்குள் வந்துள்ளன. இவை தங்களுக்குள் தலா ஒரு முறை மோதுகின்றன.

இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா- சீனா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சீனா 4-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை தோற்கடித்து 2-வது வெற்றியுடன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

நாளை நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஜப்பானுடன் (பிற்பகல் 2.15 மணி) மல்லுகட்டுகிறது. 3 புள்ளியுடன் உள்ள இந்திய அணி இதில் வெற்றி பெற்றால் சிக்கலின்றி இறுதிப்போட்டிக்குள் நுழையும். குறைந்தது ‘டிரா’ வாவது செய்ய வேண்டும். மாறாக தோல்வியடைந்தால் வெளியேற வேண்டியதுதான்.

1 More update

Next Story