பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் - இந்திய வீரர் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே 590 புள்ளிகள் பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
பாரீஸ்,
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த தொடரில் இந்தியா இதுவரை 2 பதக்கங்கள் (2 வெண்கலம்) வென்று அசத்தியுள்ளது.
இந்த நிலையில் இன்று ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல்(50 மீட்டர் ரைபிள் 3 நிலை தகுதி சுற்று) போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே 590 புள்ளிகள் பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். மற்றொரு இந்திய வீரர் ஐஸ்வரி சிங் தோமர் 589 புள்ளிகள் பெற்ற நிலையில், இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்து விட்டார்.
Related Tags :
Next Story