பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய வீராங்கனை லவ்லினா காலிறுதிக்கு முன்னேற்றம்


பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய வீராங்கனை லவ்லினா காலிறுதிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 31 July 2024 5:22 PM IST (Updated: 31 July 2024 8:23 PM IST)
t-max-icont-min-icon

ஒலிம்பிக் குத்துச்சண்டை காலிறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் முன்னேறியுள்ளார்.

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த தொடரில் இந்தியா இதுவரை 2 பதக்கங்கள் (2 வெண்கலம்) வென்று அசத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற மகளிர் குத்துச்சண்டை போட்டியில் காலிறுதிக்கு முந்தைய ரவுண்ட் ஆப் 16 சுற்றில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன், நார்வே வீராங்கனை சன்னிவா ஹாப்ஸ்டட் உடன் மோதினார்.

இந்த போட்டியில் லவ்லினா 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். காலிறுதி சுற்றில் வரும் ஆகஸ்ட் 4-ந்தேதி சீன வீராங்கனை லீ கியானுடன் லவ்லினா மோத உள்ளார்.


Next Story