பாரீஸ் ஒலிம்பிக்; ஜூலியன் கராக்கியை வீழ்த்திய லக்ஷயா சென்


பாரீஸ் ஒலிம்பிக்; ஜூலியன் கராக்கியை வீழ்த்திய லக்ஷயா சென்
x

Image Courtesy: AFP

இந்தியாவின் லக்‌ஷயா சென் பெல்ஜியத்தின் ஜூலியன் கராக்கி உடன் மோதினார்.

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில், 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் இந்த தொடரில் பேட்மிண்டன் போட்டியில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் குரூப் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் லக்ஷயா சென் பெல்ஜியத்தின் ஜூலியன் கராக்கி உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட லக்ஷயா சென் 21-19, 21-14 என்ற புள்ளிக்கணக்கில் ஜூலியன் கராக்கியை வீழ்த்தினார்.


Next Story