பாரீஸ் ஒலிம்பிக்: லக்சயா சென் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்
ஒலிம்பிக் பேட்மிண்டனில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு லக்சயா சென் முன்னேறியுள்ளார்.
பாரீஸ்,
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த தொடரில் இந்தியா இதுவரை 2 பதக்கங்கள் (2 வெண்கலம்) வென்று அசத்தியுள்ளது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் ஆட்டம் ஒன்றில் லக்சயா சென்(இந்தியா), உலகின் 3-ம் நிலை வீரரான ஜோனதன் கிறிஸ்டி(இந்தோனேசியா) ஆகியோர் மோதினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லக்சயா சென் 21-18, 21-12 என்ற புள்ளிக்கணக்கில் (2-0 என்ற நேர்செட்டில்) வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றான ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதே போல் பெண்கள் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.