பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய வீரர், வீராங்கனைகளுக்கான இன்றைய போட்டிகள்
இந்திய வீரர், வீராங்கனைகள் இன்று எந்தெந்த போட்டிகளில் களமிறங்குகின்றனர் என்பதை காணலாம்.
பாரீஸ்,
பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு நாட்டு வீரர், வீராங்கனைகள் அபாரமான திறமையை வெளிப்படுத்தி பதக்க வேட்டைகளை நடத்தி வருகின்றனர். தற்போது வரை போட்டிகளின் முடிவில் பதக்கப் பட்டியலில் அமெரிக்க முதலிடத்தை பிடித்துள்ளது.
அதன்படி, 19 தங்கம், 26 வெள்ளி மற்றும் 26 வெண்கல பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 19 தங்கம் உட்பட 45 பதக்கங்களுடன் சீனா இரண்டாவது இடத்திலும், 12 தங்கம் உட்பட 44 பதக்கங்களுடன் பிரான்ஸ் 3வது இடத்திலும் உள்ளது. இந்தியா மூன்று வெண்கல பதக்கங்களுடன் 57வது இடத்தை பிடித்துள்ளது.
இந்நிலையில் இந்திய வீரர், வீராங்கனைகள் இன்று எந்தெந்த போட்டிகளில் களமிறங்குகின்றனர் என்பதை காணலாம்..!
துப்பாக்கி சுடுதல்:- அனந்த்ஜீத் சிங் நருகா, மகேஸ்வரி சவுகான் (ஸ்கீட் கலப்பு அணிகள் பிரிவு தகுதி சுற்று), பகல் 12 30 மணி.
டேபிள் டென்னிஸ்:- இந்தியா - ருமேனியா (பெண்கள் அணிகள் பிரிவு தொடக்க சுற்று), பகல் 1 30 மணி.
தடகளம்:- கிரண் பாஹல் (பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டம் தகுதி சுற்று), மாலை 3.25 மணி. அவினாஷ் சாப்லே (ஆண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ் தகுதி சுற்று), இரவு 10.34 மணி.
பாய்மரப்படகு:- நேத்ரா குமணன் (பெண்கள் டிங்கி 9-வது மற்றும் 10-வது சுற்று பந்தயம்), மாலை 3 45 மணி, விஷ்ணு சரவணன் (ஆண்கள் டிங்கி 9-வது, 10-வது சுற்று பந்தயம்), மாலை 6.10 மணி.
பேட்மிண்டன்:- லக்சயா சென் (இந்தியா) - லீ ஸி ஜியாவ் (மலேசியா) (ஆண்கள் ஒற்றையர் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டம்), மாலை 6 மணி.