ஒலிம்பிக்கில் 8 பதக்கம்.. 25 வயதிலேயே அதிர்ச்சி ஓய்வு அறிவித்த நீச்சல் வீராங்கனை

image courtesy: insagram/ariarnetitmus_
சர்வதேச நீச்சல் போட்டியில் இவர் மொத்தம் 33 பதக்கங்களை வென்றுள்ளார்.
பிரிஸ்பேன்,
ஆஸ்திரேலியாவின் பிரபல நீச்சல் வீராங்கனை அரியானே டிட்மஸ் தனது 25-வது வயதிலேயே நீச்சல் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறார்.
அரியானே டிட்மஸ் 400 மீட்டர் பிரீஸ்டைலில் உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனாக வலம் வருகிறார். கடந்த ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்கில் 400 மீட்டர் பிரீஸ்டைலில் கடும் போட்டிக்கிடையே மகுடம் சூடினார். ஒலிம்பிக்கில் மட்டும் இதுவரை 4 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என 8 பதக்கங்களை வென்றுள்ளார்.
அத்துடன் உலக சாம்பியன்ஷிப்பில் 9 பதக்கம் என சர்வதேச போட்டியில் மொத்தம் 33 பதக்கங்களை அறுவடை செய்துள்ளார்.
Related Tags :
Next Story






