பிரெஞ்சு ஓபன் சர்வதேச பேட்மிண்டன்: 2வது சுற்றில் தோல்வி கண்ட இந்திய வீராங்கனை

பிரெஞ்சு ஓபன் சர்வதேச பேட்மிண்டன்: 2வது சுற்றில் தோல்வி கண்ட இந்திய வீராங்கனை
x

கோப்புப்படம்

பிரெஞ்சு ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பிரான்சில் உள்ள செசோன் செவிங்க் நகரில் நடந்து வருகிறது.

செசோன் செவிங்க்,

பிரெஞ்சு ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பிரான்சில் உள்ள செசோன் செவிங்க் நகரில் நடந்து வருகிறது.

இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள வாங் ஜியி-யை (சீனா) சந்தித்தார்.

இந்த மோதலில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்திய வாங் ஜியி 21-14, 21-11 என்ற நேர் செட் கணக்கில் உன்னதி ஹூடாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். தோல்வி கண்ட உன்னதி ஹூடா தொடரில் இருந்து வெளியேறினார்.

1 More update

Next Story