ஹைலோ ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் தோல்வி கண்ட லக்சயா சென்

ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

பெர்லின்,

ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் லக்சயா சென், அயர்லாந்தின் நகாட் நுகெயன் உடன் மோதினார்.

இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நகாட் நுகெயன் 21-17, 14-21, 21-15 என்ற செட் கணக்கில் லக்சயா சென்னை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதி போட்டியில் பின்லாந்து வீரர் காலே கோலிஜோனன் 19-21, 21-12, 22-20 என்ற செட் கணக்கில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டியைத் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com