மக்காவ் ஓபன் பேட்மிண்டன்: லக்சயா சென் அரையிறுதியில் தோல்வி


மக்காவ் ஓபன் பேட்மிண்டன்: லக்சயா சென் அரையிறுதியில்  தோல்வி
x
தினத்தந்தி 3 Aug 2025 3:15 AM IST (Updated: 3 Aug 2025 3:16 AM IST)
t-max-icont-min-icon

முடிவில் தருண் 21-19, 16-21, 16-21 என்ற செட் கணக்கில் ஜஸ்டினிடம் போராடி வீழ்ந்தார்.

மக்காவ்,

மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி மக்காவ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் தருண், 45-ம் நிலை வீரரான மலேசியாவின் ஜஸ்டின் ஹோக்கை சந்தித்தார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை கைப்பற்றிய தருண், அதன் பிறகு இழைத்த தவறு காரணமாக சறுக்கலை சந்தித்தார். முடிவில் தருண் 21-19, 16-21, 16-21 என்ற செட் கணக்கில் ஜஸ்டினிடம் போராடி வீழ்ந்தார். இந்த ஆட்டம் 1 மணி 21 நிமிடம் நீடித்தது.

மற்றொரு அரையிறுதியில் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனும், தரவரிசையில் 17-வது இடம் வகிப்பவருமான இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் 16-21, 9-21 என்ற நேர்செட்டில் 39 நிமிடங்களில் தரநிலையில் 25-வது இடத்தில் உள்ள இந்தோனேசியாவின் ஆல்வி பர்ஹானிடம் தோற்று வெளியேறினார். இதன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

1 More update

Next Story