பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன்; இந்தியாவின் நிதேஷ் குமார் தங்கம் வென்று அசத்தல்


Para Olympic Badminton; Indias Nitesh Kumar won the gold and was amazing
x

Image Courtesy: X (Twitter)

தினத்தந்தி 2 Sept 2024 5:15 PM IST (Updated: 2 Sept 2024 5:19 PM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.

பாரீஸ்,

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பேட்மிண்டன் விளையாட்டில், ஆண்கள் ஒற்றையர் எஸ்.எல்.3 பிரிவின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் இந்தியாவின் நிதேஷ் குமார், பிரிட்டனின் டேனியல் பெத்தேலை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 21-14 என்ற புள்ளிக்கணக்கில் நிதேஷ் குமாரும், 2வது செட்டை 21-18 என்ற புள்ளிக்கணக்கில் டேனியல் பெத்தேலும் கைப்பற்றினர்.

இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட் பரபரப்பாக நடைபெற்றது. இதில் இருவரும் மாறி மாறி புள்ளிகளை எடுத்தனர். இறுதியில் 3வது செட்டில் 23-21 என்ற புள்ளிக்கணக்கில் டேனியல் பெத்தேலை வீழ்த்தி நிதேஷ் குமார் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். தோல்வி கண்ட டேனியல் பெத்தேல் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. இந்தியா இதுவரை 2 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் வென்றுள்ளது.


Next Story