பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன்: நிதிஷ் குமார், துளசிமதி ஜோடி தோல்வி
பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 84 வீரர் , வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
பாரீஸ்,
மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், பாரா ஒலிம்பிக் கலப்பு இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நிதிஷ் குமார், துளசிமதி ஜோடி - மலேசியாவின் ஹிக்மத் ராம்தானி லியானி ராத்ரி ஒக்டிலா ஜோடியை எதிர்கொண்டது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21-15, 21-8 என்ற கணக்கில் இந்திய ஜோடியை வீழ்த்தி, மலேசிய ஜோடி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
Related Tags :
Next Story