பாரீஸ் ஒலிம்பிக்: பளுதூக்குதலில் மீண்டும் பதக்கம் வெல்வாரா மீராபாய் சானு..? ரசிகர்கள் எதிர்பார்ப்பு


பாரீஸ் ஒலிம்பிக்: பளுதூக்குதலில் மீண்டும் பதக்கம் வெல்வாரா மீராபாய் சானு..? ரசிகர்கள் எதிர்பார்ப்பு
x

கோப்புப்படம்

தினத்தந்தி 12 July 2024 1:01 PM IST (Updated: 16 July 2024 5:23 PM IST)
t-max-icont-min-icon

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 26-ந்தேதி கோலாகலமாக தொடங்குகிறது.

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 26-ந்தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த போட்டிக்கு இந்தியா சார்பில் இதுவரை 124 பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்த தொடருக்கு இன்னும் 13 நாட்கள் மட்டுமே உள்ளதால் இதன் மீதான எதிர்பார்ப்பு தற்போதே அதிகரித்துள்ளது.

இதில் இந்தியா தரப்பில் கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு மீண்டும் பதக்கம் வெல்வாரா? என ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு டோக்கியோ ஒலிம்பிக்கில் மொத்தம் 202 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப்பதக்கம் வென்றார்.

இதே பிரிவில் சீனாவின் ஹூ ஷிஹூய் 210 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இந்நிலையில் கடந்த முறை தங்கப்பதக்கத்தை கைவிட்ட மீராபாய் சானு இம்முறை தங்கப்பதக்கத்தை கைப்பற்றி இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பாரா என்பதை பார்க்கலாம்.

1 More update

Next Story