சாய்பன் இன்டர்நேஷனல் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை தான்யா ஹேமந்த் சாம்பியன்

கோப்புப்படம்
இவர் இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை உடன் மோதினார்.
புதுடெல்லி,
வடக்கு மரியானா தீவுகளில் சாய்பன் இன்டர்நேஷனல் பேட்மிண்டன் தொடர் நடந்தது. உலக பேட்மின்டன் கூட்டமைப்பின் சோதனை முயற்சியாக, 21க்குப் பதில், 15 புள்ளி கொண்ட செட் முறை இதில் அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது ஒவ்வொரு செட்டும் வழக்கமான 21 புள்ளிகளுக்கு பதிலாக (3*21) 15 புள்ளிகளில் (3*15) முடியும் வகையில் இந்த தொடர் நடைபெற்றது.
இதன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை தான்யா ஹேமந்த், ஜப்பானின் கனே சகாய் உடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தான்யா 15-10 மற்றும் 15-8 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
Related Tags :
Next Story






