பாரா விளையாட்டிற்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது; உதயநிதி ஸ்டாலின்


பாரா விளையாட்டிற்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது; உதயநிதி ஸ்டாலின்
x

பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் இன்று தொடங்கியது.

சென்னை,

23வது தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் இன்று தொடங்கியது,. இந்த போட்டியை துணை முதல் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் . தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி போட்டியை தமிழகம் நடத்துவது இதுவே முதல் முறை. நாடு முழுவதிலும் இருந்து சுமார் 1,500 பாரா விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின்,

பாரா விளையாட்டிற்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. விளையாட்டிற்கு ரூ.3.5 கோடியை முதல்-அமைச்சர் ஒதுக்கி உள்ளார்.

மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு தேவையான பரிசு தொகையை வழங்கி வருகிறோம். தமிழகத்தைச் சேர்ந்த பாராலிம்பிக் வீரர்களால் தமிழகம் பெருமைப்படுகிறது . 3% இட ஒதுக்கீட்டு மூலம், பாராலிம்பிக் வீரர்களுக்கு அரசு பணிகளையும் வழங்கி வருகிறோம். என தெரிவித்தார் .

1 More update

Next Story