தடகளத்தில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை: உதயநிதி வழங்கினார்

ரூ.25 லட்சத்தை ஊக்கத்தொகையாக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி பாராட்டினார்.
சென்னை,
3-வது ஆசிய இளையோர் விளையாட்டு போட்டி பக்ரைனில் நடந்தது. இதில் தடகளத்தில் நெல்லையைச் சேர்ந்த எட்வினா ஜேசன் 400 மீட்டர் மற்றும் 1,000 மீட்டர் மெட்லே தொடர் ஓட்டத்தில் 2 வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். நேற்று சென்னை திரும்பிய அவருக்கு ரூ.25 லட்சத்தை ஊக்கத்தொகையாக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி பாராட்டினார்.
இதே போல் சமீபத்தில் ராஞ்சியில் நடந்த 4-வது தெற்காசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் 4 தங்கம் உள்பட 10 பதக்கங்களை வென்றனர் இவர்களில் மனவ், நந்தினி, ஒலிம்பா ஸ்டெபி, சரண், தினேஷ், ஆதர்ஷ் ராம், பவானி ஆகியோருக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து மொத்தம் ரூ.15½ லட்சத்தை ஊக்கத்தொகையாக உதயநிதி ஸ்டாலின் அளித்தார்.
Related Tags :
Next Story






