மகளிர் உலகக்கோப்பை செஸ்: இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் அரையிறுதிக்கு முன்னேற்றம்


மகளிர் உலகக்கோப்பை செஸ்: இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் அரையிறுதிக்கு முன்னேற்றம்
x

image courtesy:PTI

தினத்தந்தி 22 July 2025 6:59 AM IST (Updated: 22 July 2025 7:04 AM IST)
t-max-icont-min-icon

திவ்யா தேஷ்முக் காலிறுதியில் சக நாட்டவரான ஹரிகா உடன் மோதினார்.

பதுமி,

மகளிர் உலகக்கோப்பை செஸ் தொடர் ஜார்ஜியாவின் பதுமி நகரில் நடந்து வருகிறது. இதன் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனைகளான திவ்யா தேஷ்முக் - ஹரிகா நேருக்கு நேர் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டைபிரேக்கரில் திவ்யா தேஷ்முக் 2-0 என்ற கணக்கில் ஹரிகாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். ஏற்கனவே இந்தியாவின் கோனெரு ஹம்பி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீராங்கனை வைஷாலி 0.5-1.5 என்ற புள்ளி கணக்கில் சீனாவின் டான் ஜோங்யிடம் தோற்று வெளியேறினார்.

1 More update

Related Tags :
Next Story