உலகக் கோப்பை செஸ்: பிரக்ஞானந்தா மீண்டும் ‘டிரா’


உலகக் கோப்பை செஸ்: பிரக்ஞானந்தா மீண்டும் ‘டிரா’
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 13 Nov 2025 3:45 AM IST (Updated: 13 Nov 2025 3:45 AM IST)
t-max-icont-min-icon

நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய வீரரான பிரக்ஞானந்தா, ரஷியாவின் டேனில் துபோவை சந்தித்தார்.

கோவா,

11-வது உலகக் கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடந்து வருகிறது. 8 சுற்றுகளை கொண்ட இந்த தொடரில் ஒவ்வொரு சுற்றிலும் 2 ஆட்டங்கள் நடத்தப்படும். இதில் 4-வது சுற்றின் 2-வது ஆட்டம் நேற்று நடந்தது.

இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, ரஷியாவின் டேனில் துபோவை சந்தித்தார். கருப்பு நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 30-வது நகர்த்தலில் டிரா கண்டார். முதலாவது ஆட்டமும் டிரா ஆனதால் வெற்றியாளரை தீர்மானிக்க இவர்கள் இடையிலான மோதல் டைபிரேக்கருக்கு நகருகிறது.

இதே போல் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி, ஹங்கேரி கிராண்டமாஸ்டர் பீட்டர் லெகோவுடனும், ஹரிகிருஷ்ணா, சுவீடனின் நில்ஸ் கிரான்ட்லிசுடனும் ‘டிரா’ செய்தனர். இவர்களது ஆட்டத்திலும் 5-வது சுற்றை எட்டப்போவது யார் என்பது இன்றைய டைபிரேக்கர் மூலம் தெரிய வரும்.

அதே சமயம் உலக ஜூனியர் சாம்பியனான இந்தியாவின் பிரணவ், உஸ்பெகினிஸ்தானின் நோடிர்பெக் யாகுபோவுடனும், கார்த்திக் வெங்கட்ராமன், வியட்னாமின் லி குவான் லியாமுடனும் தோற்று வெளியேறினார்.

1 More update

Next Story