உலக ஜூனியர் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்


உலக ஜூனியர் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
x

இந்தியாவின் தன்வி ஷர்மா, லியு சி யாவை (சீனா) சந்தித்தார்.

கவுகாத்தி,

உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் தன்வி ஷர்மா, லியு சி யாவை (சீனா) சந்தித்தார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தன்வி ஷர்மா 15-11, 15-9 என்ற நேர்செட்டில் லியு சி யாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இதனால் அவருக்கு குறைந்தபட்சம் வெள்ளிப்பதக்கம் உறுதியானது.

இறுதிப்போட்டியில் தன்வி ஷர்மா, தாய்லாந்தின் அனயாபட்டை சந்திக்கிறார்.

1 More update

Next Story