உலக ஜூனியர் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை தன்வி வெள்ளி வென்று அசத்தல்

image courtesy:PTI
தன்வி ஷர்மா இறுதிப்போட்டியில் அனயாபட் பிசிட் பிரீசாசக்கை எதிர்கொண்டார்.
கவுகாத்தி,
உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்து வந்தது. இதன் மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் தன்வி ஷர்மா, தாய்லாந்தின் அனயாபட் பிசிட் பிரீசாசக்கை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் தன்வி ஷர்மா 7-15 மற்றும் 12-15 என்ற நேர் செட்டில் அனயாபட்டிடம் தோல்வியை தழுவினார். இதனால் அவர் வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று. இருப்பினும் உலக ஜூனியர் பேட்மிண்டனில் 17 ஆண்டுக்கு பிறகு பதக்கத்தை ருசித்த இந்திய வீராங்கனை என்ற சிறப்பை தன்வி பெற்றார்.
Related Tags :
Next Story






