உலக டூர் பேட்மிண்டன்: 2-வது வெற்றியை பெற்ற சாத்விக்- சிராக் ஜோடி

சாத்விக் - சிராக் ஷெட்டி ஜோடி நேற்றைய ஆட்டத்தில் இந்தோனேசியா இணையை சந்தித்தது.
ஹாங்சோவ்,
முன்னணி 8 வீரர், வீராங்கனைகள் மற்றும் ஜோடிகள் மட்டுமே பங்கேற்றுள்ள உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது.இதில் இரட்டையரில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி நேற்றைய ஆட்டத்தில் இந்தோனேசியாவின் பேஜர் அல்பியான்- முகமது ஷோகிபுல் பிக்ரி இணையை சந்தித்தது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய சாத்விக் - சிராக் ஷெட்டி ஜோடி21-11, 16-21, 21-11 என்ற செட் கணக்கில் இந்தோனேசியா இணையை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றதோடு அரையிறுதி வாய்ப்பையும் நெருங்கியது.
சாத்விக்- சிராக் கூட்டணி தங்களது கடைசி லீக்கில், ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவர்களான மலேசியாவின் ஆரோன் சியா- சோ வூ யிக் ஜோடியை சந்திக்கிறது.
Related Tags :
Next Story






