வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி


வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
x
தினத்தந்தி 7 April 2025 12:26 PM IST (Updated: 7 April 2025 1:03 PM IST)
t-max-icont-min-icon

3-வது சுற்று கோடை மழை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் தற்போது கோடை மழை பெய்ய தொடங்கி இருக்கிறது. கடந்த 3-ந்தேதி முதல் 2-வது சுற்று கோடை மழை பெய்து வரும் சூழலில், இடையில் சிறிய இடைவெளிவிட்டு, பின்னர் 3-வது சுற்று கோடை மழை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (8-ம் தேதி) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளையும், அதற்கடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்ககடல் பகுதிகளை அடைய கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக தமிழ்நாட்டில் நாளை முதல் மேலும் ஒரு வாரத்துக்கு மழை தொடரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story