தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு


தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 5 Aug 2024 1:58 PM IST (Updated: 5 Aug 2024 4:38 PM IST)
t-max-icont-min-icon

சென்னையின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது.

சென்னை,

தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. குறிப்பாக, சென்னையின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது.

இந்த நிலையில், தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது உள்ளது

நாளை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்: ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 6 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.


Next Story