இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு - மஞ்சள் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்


இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு - மஞ்சள் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்
x

கோப்புப்படம்

இன்றும், நாளையும் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் 7 முதல் 11 செமீ அளவு வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதால், கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியாகி உள்ள அறிக்கையில், "வரும் 14 மற்றும் 15-ம் தேதிகளில் தமிழ்நாட்டிற்கு கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. கிழக்கு ராஜஸ்தான், பீகார், அசாம், மேகாலயா, புதுச்சேரி, காரைக்கால், கேரளா மற்றும் மாஹே ஆகிய மாநிலங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

வடமேற்கு இந்திய மாநிலங்களான உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் கிழக்கு ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 17 ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், சண்டிகர் மற்றும் அரியானாவில் ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று கிழக்கு ராஜஸ்தான் மீது அதிக தீவிரத்துடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story