மாலை 5.45 மணி வரை 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு


மாலை 5.45 மணி வரை 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
x

கோப்புப்படம்

தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை,

தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இன்று ஒருசில பகுதிகளில் 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், அதிகபட்சமாக 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் மாலை 5.45 வரை 12 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


Next Story