சென்னையில் மித அளவிலான மழை; வெப்பம் தணிந்தது
சென்னையில் வேப்பேரி, புரசைவாக்கம், எழும்பூர் மற்றும் பெரியமேடு உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையில் லேசான அளவில் மழை பெய்தது
சென்னை,
சென்னையில் பல்லாவரம், கிண்டி, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் மித அளவிலான மழை பெய்து வருகிறது. இதனால், அந்த பகுதிகளில் வெப்பம் சற்று தணிந்துள்ளது. குளிர்ச்சியான நிலைமை ஏற்பட்டு உள்ளது.
இதேபோன்று வேப்பேரி, எழும்பூர் மற்றும் புரசைவாக்கம், பெரியமேடு உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையில் லேசான அளவில் மழை பெய்தது. தொடர்ந்து தூறல் விழுந்தபடியே காணப்படுகிறது. இதனால், கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெயில், வெப்ப சலனம் என காணப்பட்ட நிலையில், வெப்பம் சற்று குறைந்து உள்ளது.
Related Tags :
Next Story