சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
சென்னை,
மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்ககடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்தது.
இந்த நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது சென்னை எழும்பூர், சென்டிரல் , சேப்பாக்கம், போரூர், கிண்டி, அடையாறு , திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அடையாறு, திருவான்மியூர், தரமணி, பட்டினப்பாக்கம், வடபழனி, கோடம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், தியாகராய நகர், தேனாம்பேட்டை , ஈக்காட்டுத்தாங்கல், மாம்பலம் , தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் பெய்து வருகிறது.
தொடர்ந்து வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது மழை பெய்துள்ளதால், சென்னையில் தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.