நடிகை மீனாவுக்கு 2-வது திருமணமா?


நடிகை மீனாவுக்கு 2-வது திருமணமா?
x

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்த மீனா 2009-ல் வித்யா சாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது. நைனிகாவும் படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் மீனாவின் கணவர் வித்யா சாகர் புறாக்கள் எச்சத்தால் ஏற்படும் நுரையீரல் தொற்றினால் பாதிக்கப்பட்டு கடந்த வருடம் மரணம் அடைந்தார். அந்த துக்கத்தில் இருந்து மீள முடியாமல் தவித்த மீனாவை சக நடிகைகள் வெளியூர்களுக்கு அழைத்து சென்று கொஞ்சம் கொஞ்சமாக தேற்றி சகஜ நிலைக்கு மீட்டு வந்தனர்.

கடந்த சில நாட்களாக மீனா 2-வது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக வலைத்தளங்களில் தொடர்ந்து தகவல்கள் பரவி வருகின்றன. விவாகரத்தான நடிகர் ஒருவரை மணக்க இருப்பதாகவும் பேசி வருகிறார்கள்.

இதற்கு மீனா "எனது கணவர் இல்லை என்பதையே என்னால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்குள்ளாகவே இதுபோன்ற தகவல்கள் எப்படி பரவுகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நல்ல கதைகள் அமைந்தால் சினிமாவில் நடிக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறேன். எனது மகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து கொடுப்பதும் எனக்கு முக்கியமான விஷயம்'' என்று தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.


Next Story