'ஜெயிலர்' படப்பிடிப்பை முடித்த நடிகர் ரஜினி


ஜெயிலர் படப்பிடிப்பை முடித்த நடிகர் ரஜினி
x

ரஜினிகாந்த் 'ஜெயிலர்' படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை டாக்டர், பீஸ்ட் படங்களை எடுத்து பிரபலமான நெல்சன் டைரக்டு செய்கிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள்.

ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக வட மாநிலங்களில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. சென்னையிலும் ஜெயில் அரங்கு அமைத்து முக்கிய காட்சிகளை படமாக்கினர்.

இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பை ரஜினிகாந்த் முடித்து விட்டார் என்று டைரக்டர் நெல்சன் தெரிவித்து உள்ளார். ரஜினி நடிக்க வேண்டிய அனைத்து காட்சிகளும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

தற்போது டப்பிங், ரீ ரிக்கார்டிங் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் தொடங்கி உள்ளன. ஜெயிலர் படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு இருந்தனர். ஆனால் முன்னதாகவே ஆகஸ்டு மாதம் திரைக்கு கொண்டுவரலாமா என்று ஆலோசனை நடக்கிறது.

1 More update

Next Story