நடிகை குஷ்பு காயம்


நடிகை குஷ்பு காயம்
x

குஷ்பு ஒரு பயணத்துக்கான ஏற்பாடுகளில் இருந்தபோது விபத்தில் சிக்கி காயம் அடைந்து விட்டதாக தெரிவித்து தனது காலில் கட்டுப்போட்டுள்ள புகைப்படத்தை வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார்.

தமிழ் திரை உலகில் 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த குஷ்பு தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். கடைசியாக ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' படத்தில் நடித்து இருந்தார். பா.ஜனதா கட்சியில் இணைந்து அரசியல் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சமூக வலைத்தளத்தில் அரசியல் மற்றும் சமூக கருத்துகளையும் அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் குஷ்பு ஒரு பயணத்துக்கான ஏற்பாடுகளில் இருந்தபோது விபத்தில் சிக்கி காயம் அடைந்து விட்டதாக தெரிவித்து தனது காலில் கட்டுப்போட்டுள்ள புகைப்படத்தை வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். அதில், ''ஒரு விபத்து அன்றாட வாழ்வை சீர்குலைத்து வலியை ஏற்படுத்தும்போது ஒருவர் என்ன செய்வார். மற்றவர்கள் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் எனது பயணம் நிற்காமல் தொடரும். இலக்கை அடையும் வரை நிறுத்தமாட்டேன்'' என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார்.

காலில் காயமுற்று கட்டுப்போட்டுள்ள குஷ்பு புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவர் விரைவில் குணம் அடையை வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

1 More update

Next Story