நடிகை மேக்னாராஜ் 2-வது திருமணம்?
2-வது திருமணம் செய்து கொள்வீர்களா? என்ற கேள்விக்கு மேக்னா ராஜ் பதில் அளித்து கூறும்போது,
தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மேக்னா ராஜ் மலையாளம், கன்னட மொழியிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். மேக்னா ராஜின் கணவரும், கன்னட நடிகருமான சிரஞ்சீவி சர்ஜா 2020-ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. மேக்னா ராஜுக்கு 32 வயதாகும் நிலையில் அவரிடம் 2-வது திருமணம் செய்து கொள்ளும்படி குடும்பத்தினர் வற்புறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் 2-வது திருமணம் செய்து கொள்வீர்களா? என்ற கேள்விக்கு மேக்னா ராஜ் பதில் அளித்து கூறும்போது, ''எனது கணவர் மறைவுக்கு பிறகு குழந்தையின் எதிர்காலம் பற்றியே சிந்திக்கிறேன். என்னிடம் 2-வது திருமணம் செய்து கொள்ளும்படி சிலர் வற்புறுத்துகிறார்கள். இன்னும் சிலர் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்கிறார்கள். இப்போது 2-வது திருமணம் செய்து கொள்வது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. வரும் காலங்களில் என்ன நடக்கும் என்று தெரியவில்லை. எனது மனம் என்ன சொல்கிறதோ அதன்படி நடப்பேன். 2-வது திருமண விஷயத்தில் நான் என்ன முடிவு எடுத்தாலும், சிரஞ்சீவி சர்ஜா என்னுடன் இருப்பார் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.