இளையராஜாவை சந்தித்த நடிகை ஸ்ரேயா

இசையமைப்பாளர் இளையராஜாவை அவரது ஸ்டூடியோவுக்கு சென்று நடிகை ஸ்ரேயா சந்தித்தார். பப்பாராவ் பிய்யாலா இயக்கத்தில் மியூசிக் ஸ்கூல் என்ற படத்தில் ஸ்ரேயா நடித்து இருக்கிறார். பிரகாஷ்ராஜ், ஷர்மன் ஜோஷி, ஷாம் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
இதற்காகவே மரியாதை நிமித்தமாக இளையராஜாவை டைரக்டருடன் சென்று ஸ்ரேயா சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகிறது. இதுகுறித்து ஸ்ரேயா கூறும்போது, "இளையராஜாவை சந்தித்தேன். மியூசிக் ஸ்கூல் படத்தில் அவரது இசை எல்லோரையும் மயக்கும் வகையில் அமைந்துள்ளது. அவரது இசை வேறு உலகத்துக்கு உங்களை அழைத்துச் செல்லும்.
எனக்கு மிக சிறந்த பெற்றோர் இருந்ததால் நான் நினைத்ததை செய்ய முடிந்தது. என் உறவினர்கள் சிலர் வீட்டை விட்டு வெளியே வரவே போராடினர். அதனால் இந்த படத்தின் கதையை கேட்டதுமே ஒப்புக்கொண்டேன். மாணவர்கள் எதிர்கொள்ளும் தற்போதைய கல்வி அழுத்தத்தையும், அவர்கள் வளர்ச்சியின் முக்கியத்துவத்தையும் பேசும் படமாக இது உருவாகி உள்ளது. இது சொல்லப்பட வேண்டிய கதை. படம் நன்றாக வந்துள்ளது'' என்றார்.






