சரித்திர கதையில் ஐஸ்வர்யாராய் தோற்றம்


சரித்திர கதையில் ஐஸ்வர்யாராய் தோற்றம்
x

பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யாராய் தோற்றத்தை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர்.

தமிழில் இருவர், ஜீன்ஸ், எந்திரன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யாராய் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்தப்படத்தில் நடித்துள்ள நடிகர்-நடிகைகளின் தோற்றங்களை படக்குழுவினர் வெளியிட்டு வருகிறார்கள். பொன்னியின் செல்வனில்ஐஸ்வர்யாராய், நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது தோற்றத்தை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர். அந்தப் புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நந்தினி வேடத்தில் ஐஸ்வர்யாராய் அழகாக இருப்பதாக ரசிகர்கள் வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். ஐஸ்வர்யா ராய் தனது அழகு ரகசியம் குறித்து அளித்துள்ள பேட்டியில், ''சினிமாவில் அறிமுகமானது முதல் இப்போது வரை என் சருமத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று அனைவரும் சொல்கிறார்கள். எனது சரும பாதுகாப்புக்கு சில வம்ச பாரம்பரிய எளிய சில முறைகளே காரணம்.

வறுத்த, பொறித்த, மசாலா உணவுகளுக்கு நான் தூரமாக இருப்பேன். ஆவியில் வேக வைத்த பிரஷ்ஷான காய்கறிகளை மட்டுமே சாப்பிடுவேன். அரிசி விஷயத்துக்கு வந்தால் பிரவுன் ரைஸ் எடுத்துக் கொள்கிறேன்.

மூன்று வேளையும் வயிறு முட்ட சாப்பிடாமல் கொஞ்சம் கொஞ்சமாக நான்கு ஐந்து முறை சாப்பிடுகிறேன். தண்ணீர் அதிகமாக குடிக்கிறேன். என் அம்மா இன்று வரை அதைத்தான் அனுசரிக்கிறார். நானும் அவர் சொன்னதைத்தான் கடைபிடிக்கிறேன். சிறு வயது முதலே என் அம்மா சொன்ன எளிய முறைகளை அனுசரிப்பதன் மூலம் எனது சருமத்தை பெரிய கஷ்டம் இல்லாமல் பாதுகாத்து வருகிறேன்" என்றார்.


Next Story