அரசியல்வாதியை மணக்கும் நடிகை


அரசியல்வாதியை மணக்கும் நடிகை
x

பிரபல இந்தி நடிகை பரினிதி சோப்ரா. இவர் இந்தியில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து இருக்கிறார். பரினிதிக்கு தற்போது 34 வயது ஆகிறது.

இவர் பிரியங்கா சோப்ராவின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது. பரினிதி சோப்ராவும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரான ராகவ் சதாவும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் ஒன்றாக சுற்றும் புகைப்படங்களும் வெளியானது. ஆனாலும் இருவரும் இதனை உறுதிப்படுத்தாமல் இருந்தனர்.

தற்போது அவர்கள் மும்பை விமான நிலையத்தில் ஒரே காரில் ஏறிச்செல்லும் வீடியோ வெளியாகி வைரலாகியது. இந்தநிலையில் இருவரும் காதலிப்பதை பிரபல பாடகர் ஹார்டி சாந்து உறுதிப்படுத்தி உள்ளார்.

பரினிதி சோப்ராவுக்கும், ராகவ் சதாவுக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பரினிதிக்கு வலைத்தளத்தில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.


Next Story