ஜி.வி. பிரகாஷ் இசையில் `ஜப்பான்' படத்தின் சொட்டாங்கல்லா பாடல் வெளியாகியது


ஜி.வி. பிரகாஷ் இசையில் `ஜப்பான் படத்தின் சொட்டாங்கல்லா பாடல் வெளியாகியது
x

சமீபத்தில் ஜப்பான் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

சென்னை,

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்றது. 'ஜப்பான்' திரைப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் கடந்த 28-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. சொட்டாங்கல்லா எனும் அந்த பாடல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.


Next Story