கவர்ச்சி காட்டுவதாக விமர்சனம் - வீடியோ வெளியிட்டு நடிகை பதிலடி


கவர்ச்சி காட்டுவதாக விமர்சனம் - வீடியோ வெளியிட்டு நடிகை பதிலடி
x

தர்ஷா குப்தா கவர்ச்சியை மட்டுமே நம்பி இருக்கிறார் என்றும் நடிப்பு திறமையை வெளிப்படுத்துங்கள் என்றும் வலைத்தளத்தில் விமர்சித்து வந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஓ மை கோஸ்ட் படத்தில் தர்ஷா குப்தா கயிறு கட்டி கஷ்டப்பட்டு நடித்த வீடியோவை வெளியிட்டார்.

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்த தர்ஷா குப்தா நடிப்பில் 'ஓ மை கோஸ்ட்' படம் திரைக்கு வந்துள்ளது. இதில் சன்னிலியோனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். தர்ஷா குப்தா வலைத்தளத்தில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் தர்ஷா குப்தா கவர்ச்சியை மட்டுமே நம்பி இருக்கிறார் என்றும், அதை தாண்டி நடிப்பு திறமையை வெளிப்படுத்துங்கள் என்றும் வலைத்தளத்தில் விமர்சித்து வந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஓ மை கோஸ்ட் படத்தில் தர்ஷா குப்தா கயிறு கட்டி கஷ்டப்பட்டு நடித்த வீடியோவை வெளியிட்டு, ''கவர்ச்சியை தாண்டி உங்களின் உழைப்பையும், நடிப்பு திறனையும் காட்டுங்கள்'' என்று கூறிய அனைவருக்கும் இந்த ஒ மை கோஸ்ட் படத்தின் வீடியோவை சமர்ப்பிக்கிறேன். எதுவும் சாப்பிடாமல் காலையில் இருந்து மாலை 6 மணி வரை சிறிதளவு தண்ணீர் கூட அருந்தாமல் இந்த காட்சியை படமாக்கினோம். கடின உழைப்பு இல்லாமல் எதுவுமே எளிதாக நடக்காது'' என்று கூறியுள்ளார். தர்ஷா குப்தா வெளியிட்ட வீடியோவுக்கும், கருத்துக்கும் நிறைய ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.


Next Story