கண் கலங்கிய தீபிகா படுகோனே
தீபிகா படுகோனே மும்பையில் அளித்த பேட்டியில், “ரசிகர்கள் பதான் படத்துக்கு காட்டும் அன்புக்கு நன்றி'' என்று சொல்லி உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கினார்.
ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே நடித்துள்ள 'பதான்' படம் திரைக்கு வரும் முன்பே எதிர்ப்புகளை சந்தித்தது. பாடல் காட்சியொன்றில் தீபிகா படுகோனே காவி நிறத்தில் நீச்சல் உடை அணிந்து நடனம் ஆடியதை கண்டித்து வட மாநிலங்களில் போராட்டங்கள் நடந்தன. தீபிகா படுகோனே கொடும்பாவியை எரித்தனர். பதான் படத்தை புறக்கணிக்கும்படி ஹேஷ்டேக்கும் டிரெண்ட் ஆனது.
அதையும் மீறி படம் திரைக்கு வந்து வசூல் குவித்து உள்ளது. இந்த நிலையில் தீபிகா படுகோனே மும்பையில் அளித்த பேட்டியில், "ரசிகர்கள் பதான் படத்துக்கு காட்டும் அன்புக்கு நன்றி'' என்று சொல்லி உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கினார். மேலும் அவர் கூறும்போது. "படம் ரிலீசானபோது ரசிகர்களுடன் தியேட்டரில் அமர்ந்து பார்க்க நினைத்தேன். ஆனால் முடியவில்லை. இப்போது எல்லோரது ஆதரவும் படத்துக்கு கிடைத்துள்ளதை பார்க்கும்போது மகிழ்ச்சியான ஒரு பண்டிகைபோல் எனக்கு தோன்றுகிறது.
நேர்மையாகவும் உண்மையாகவும் இருந்தால் அதற்கு பரிசு கிடைக்கும் என்பதை பதான் நிரூபித்து உள்ளது' என்று கண்கலங்கியபடியே பேசினார்.