ஆபாசமாக நடித்தேனா? - தமன்னா விளக்கம்


ஆபாசமாக நடித்தேனா? - தமன்னா விளக்கம்
x

தமன்னா நடித்து சமீபத்தில் வெளியாகிய வெப் தொடர் ஒன்றில் அவர் ஆபாசமாக நடித்துள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது .

தமன்னாவுக்கு என்னதான் ஆனது என்று எங்கும் அவரைப் பற்றிய சர்ச்சை பேச்சாகவே உள்ளது. இதற்கு காரணம் அவர் ஆபாசமாக நடித்துள்ள வெப் தொடர்கள்தான். முன்பெல்லாம் கவர்ச்சியில் எல்லை மீறாமல் இருந்த தமன்னா தற்போது அதை உடைத்து இருக்கிறார்.

லஸ்ட் ஸ்டோரிஸ் 2 தொடரில் படுக்கை அறையில் தமன்னா ஆபாசமாக நடித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதை பார்த்த பலரும் தமன்னாவை விமர்சித்து வருகிறார்கள். அந்த தொடருக்கு முன்னதாக ஓ.டி.டி. தளத்தில் தற்போது வெளியாகி உள்ள ஜி கர்தா வெப் தொடரிலும் தமன்னா அளவுக்கு மீறிய அரை நிர்வாண காட்சிகளில் நடித்து இன்னும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார். படுக்கை அறை காட்சிகளிலும் எல்லை மீறி இருக்கிறார். இரட்டை அர்த்த வசனங்களும் உள்ளன.

பணத்துக்காக இப்படியெல்லாம் நடிக்கலாமா என்று பலரும் தமன்னாவை கண்டித்து வருகிறார்கள். இதற்கு தமன்னா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, "கதைக்கு தேவையாக இருந்ததால் நெருக்கமான காட்சிகளில் நடித்தேன். ஜி கர்தா வெப் தொடர் பள்ளி பருவத்து காதல் கதை. எனவே அந்த கதைக்கு நெருக்கமான காட்சிகள் தேவையாக இருந்தது. காதல் உறவை விளக்கவும் கதையை வலுப்படுத்தவுமே அப்படி நடித்தேன்'' என்றார்.


Next Story