டைரக்டர் விக்னேஷ் சிவன் டுவிட்டர் பக்கம் முடக்கம்


டைரக்டர் விக்னேஷ் சிவன் டுவிட்டர் பக்கம் முடக்கம்
x

நடிகர் நடிகைகளின் டுவிட்டர் பக்கங்களை மர்ம நபர்கள் முடக்குவது தொடர்ந்து நடக்கிறது. இரு தினங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் டுவிட்டர் கணக்கை முடக்கினர். இந்த நிலையில் தற்போது டைரக்டர் விக்னேஷ் சிவன் டுவிட்டர் பக்கமும் முடக்கப்பட்டு உள்ளது. இவர் போடா போடி, நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை டைரக்டு செய்துள்ளார்.

அஜித்குமார் நடிக்கும் 62-வது படத்தையும் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர் சொன்ன கதை திருப்தி அளிக்காததால் படத்தில் இருந்து நீக்கி விட்டனர். அவருக்கு பதில் அஜித் படத்தை மகிழ்திருமேனி இயக்குகிறார். இதனால் விரக்தியான விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளத்தில் தத்துவ கருத்துக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

"பாராட்டும் வெற்றியும் நமக்கு கற்பிப்பதை விட அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக்கொடுக்கிறது'' என்று கூறியிருந்தார். இந்த நிலையில் அவரது டுவிட்டர் பக்கத்தை மர்ம நபர்கள் முடக்கி உள்ளனர். இதனால் கடுப்பான விக்னேஷ் சிவன், "எனது டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டு உள்ளது. இந்த செயல் பயத்தையும் எரிச்சலையும் தருகிறது'' என்று கூறி உள்ளார்.

1 More update

Next Story