பிரபல டைரக்டர் கொலை


பிரபல டைரக்டர் கொலை
x

ஈரானில் உள்ள கராஜ் நகரில் உள்ள வீட்டில் பிரபல டைரக்டர் டாரிஷ் மெர்ஜி படுகொலை செய்யப்பட்டார்.

பிரபல ஈரான் டைரக்டர் டாரிஷ் மெர்ஜி. இவர், 'டைமண்ட் 33', 'தி கவ்', 'மிஸ்டர் நெயிவ்', 'தி லாட்ஜர்ஸ்', 'சாரா', 'பாரி', 'தி மிக்ஸ்', 'குட் டூ பி பேக்' உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார்.

படங்கள் மூலமாக புரட்சிகரமான கருத்துகளை தெரிவித்த டாரிஷ் மெர்ஜி, விருதுகளையும் பெற்றுள்ளார். இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்த திரைப்பட விழாக்களில் பங்கேற்றும் விருதுகள் வாங்கி உள்ளார். இந்த நிலையில் ஈரானில் உள்ள கராஜ் நகரில் உள்ள வீட்டில் டாரிஷ் மெர்ஜி படுகொலை செய்யப்பட்டார். அவருக்கு வயது 83. அவரது மனைவி வஹிதா முகமதிபாரும் கொலை செய்யப்பட்டார். இருவரது உடல்களில் பல இடங்களில் கத்தி குத்து காயங்கள் இருந்தன.

கராஜில் இருந்து 30 கி.மீ. தொலைவில் தங்கியுள்ள டாரிஷ் மெர்ஜி மகள் மோனா மெர்ஜி, தற்செயலாக வீட்டுக்கு வந்தபோது படுகொலை செய்யப்பட்டிருக்கும் பெற்றோரை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் போலீசுக்கு தகவல் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஈரான் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சில வாரங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக வஹிதா முகமதிபார் போலீசில் புகார் அளித்திருந்தார். எனவே அந்த கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

1 More update

Next Story