ஆபாசமாக நடிக்க நிர்ப்பந்தம்... இந்தி டைரக்டர்கள் மீது நடிகை பரபரப்பு புகார்


ஆபாசமாக நடிக்க நிர்ப்பந்தம்... இந்தி டைரக்டர்கள் மீது நடிகை பரபரப்பு புகார்
x

பிரபல பஞ்சாபி நடிகையான சோனம் பஜ்வா, தமிழில் கப்பல் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். காட்டேரி படத்திலும் நடித்து இருந்தார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

இந்தி டைரக்டர்களும், தயாரிப்பாளர்களும் ஆபாசமாக நடிக்கும்படி தொல்லை கொடுத்ததாக சோனம் பஜ்வா புகார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "இந்தியில் பாலா, ஸ்ட்ரீட் டான்சர் 3 டி போன்ற படங்களில் நடித்த பிறகு எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. முன்னணி கதாநாயகர்கள் படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடவும் அழைத்தனர்.

ஆனால் தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் உதட்டோடு உதடு வைத்து முத்த காட்சிகளிலும், நெருக்கமான படுக்கை அறை காட்சிகளில் ஆபாசமாக நடிக்க வேண்டும் என்று என்னை துன்புறுத்தினர். இதனால் எனக்கு பயம் ஏற்பட்டது. பஞ்சாப் பட உலகில் எனக்கு நல்ல இமேஜ் இருக்கிறது. அதை கெடுத்துக்கொள்ள மனம் இல்லாமல் இந்தி படங்களில் நடிக்க வேண்டாம் என்று நானே விலகிவிட்டேன். பஞ்சாபில் அதிக சம்பளம் பெறும் நடிகை என்ற அந்தஸ்து எனக்கு இருக்கிறது'' என்றார்.


Next Story