முகமூடி அணிந்து சுற்றும் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர்


முகமூடி அணிந்து சுற்றும் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர்
x

சிறையில் இருந்து ஜாமீனில் வெளி வந்த நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் யாருடைய கண்களில் படக்கூடாது என்பதற்காக முகமூடி அணிந்து கொண்டு சுற்றி வருவதாக கூறப்படுகிறது.

பிரபல இந்தி நடிகையான ஷில்பா ஷெட்டியின் கணவர் தான் ராஜ் குந்த்ரா. தொழில் அதிபரான இவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவராகவும் இருந்து வந்தார். இந்த நிலையில் ஆபாச படம் எடுத்த வழக்கில் ராஜ்குந்த்ரா போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது சிறையில் இருந்து ஜாமீனில் வெளி வந்த அவர் யாருடைய கண்களில் படக்கூடாது என்பதற்காக முகமூடி அணிந்து கொண்டு சுற்றி வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அவர் வெளியுலகில் யார் கண்ணிலும் படாமல் இருந்து வருகிறார். அவர் முகமூடி அணிந்து வெளியிடங்களில் நடமாடி வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.


Next Story