ஷாருக்கான் வெளியிட்ட ஜவான் படத்தின் புதிய போஸ்டர்...!!!


ஷாருக்கான் வெளியிட்ட ஜவான் படத்தின் புதிய போஸ்டர்...!!!
x

இன்னும் 4 நாள்களில் ஜவான் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

புதுடெல்லி,

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையடுத்து படக்குழு பல போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

அதன்படி தற்போது ஷாருக்கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போஸ்டர் ஒன்றை பகிர்ந்துள்ளார். ஜவான் படம் திரையரங்குகளில் இன்னும் 4 நாள்களில் வெளியாக உள்ளதை குறிப்பிட்டு, அவர் அதனை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் ஜவான் படத்தின் முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டதை நினைவுகூர்ந்துள்ளார்.


Next Story