கமலுடன் நடிக்கும் ஜெயம் ரவி?


கமலுடன் நடிக்கும் ஜெயம் ரவி?
x

மணிரத்னம் இயக்கும் படத்தில் கமல்ஹாசன் ஜெயம்ரவி இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் பரவி உள்ளது.

திரையுலகில் சமீப காலமாக இரண்டு மூன்று கதாநாயகர்கள் இணைந்து நடிக்கும் படங்கள் அதிகம் வருகின்றன. ஹீரோக்கள் வில்லன்களாகவும் நடிக்கின்றனர். இந்த நிலையில் மணிரத்னம் இயக்கும் படத்தில் கமல்ஹாசன் ஜெயம்ரவி இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் பரவி உள்ளது.

கமல்ஹாசன் நடித்து கடந்த ஜூன் மாதம் வெளியான விக்ரம் படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளது. பிரபாசுடன் கல்கி ஏடி 2898 என்ற படத்தில் வில்லனாகவும் நடிக்க இருக்கிறார்.

அடுத்து மணிரத்னம் இயக்கத்திலும் நடிக்கிறார். கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் 1987-ல் வெளியான நாயகன் படம் பெரிய வெற்றி பெற்றது. 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளனர். படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஜெயம் ரவி, மலையாள நடிகர் துல்கர் சல்மான் ஆகியோரிடம் படக்குழுவினர் பேசி வருவதாக கூறப்படுகிறது. நாயகியாக நடிக்க திரிஷாவை அணுகி உள்ளனர்.


Next Story