இந்தியில் 'காமராஜ்' வாழ்க்கை படம்


இந்தியில் காமராஜ் வாழ்க்கை படம்
x

காமராஜரின் வாழ்க்கையை மையமாக வைத்து "காமராஜ்' என்ற பெயரிலான படத்தை ஏ.ஜே.பாலகிருஷ்ணன் இயக்கி இருந்தார். இதில் காமராஜர் வேடத்தில் ரிச்சர்ட் மதுரம் நடித்து இருந்தார். இளையராஜா இசையமைத்து இருந்தார்.

காமராஜ் படம் 2004-ம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் திரையிடப்பட்டு வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் காமராஜ் படத்தை இந்தி மொழியில் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.

இதுகுறித்து டைரக்டர் பாலகிருஷ்ணன் கூறும்போது, "காமராஜர் சாதாரண தொண்டனாக வாழ்க்கையை தொடங்கி உலக தலைவராக மாறினார். தமிழக முதல் அமைச்சராக 9 ஆண்டுகள் சேவை புரிந்தார். உலகம் போற்றும் மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தினார்.

காமராஜரின் வாழ்க்கையை உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களுக்கு நினைவூட்டுவது அவசியம். எனவே 'தி கிங்க் மேக்கர்' என்ற பெயரில் இந்தி மொழியில் காமராஜ் படம் அவரது பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை 15-ந்தேதி வெளியாக இருக்கிறது.

மும்பை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களில் சிறப்பு காட்சிகள் திரையிடப்படும். காமராஜ் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் முயற்சிகளும் நடக்கின்றன'' என்றார்.

1 More update

Next Story