லண்டன் - பாரிஸ் ரெயில் பயணம்... இளையராஜா பகிர்ந்த வீடியோ வைரல்


லண்டன் - பாரிஸ் ரெயில் பயணம்... இளையராஜா பகிர்ந்த வீடியோ வைரல்
x

இசைஞானி இளையராஜா லண்டனில் இருந்து பாரிஸ் நகருக்கு ரெயில் பயணம் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னனி இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. இவர் 1976 -ம் ஆண்டு வெளியான 'அன்னக்கிளி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான. இளையராஜா தற்போது வரை 1,000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் 7,000 பாடல்களை எழுதி உள்ளார். இன்றும் அவர் இசையமைப்பில் உருவாகும் படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட உள்ளது. இப்படத்தில் நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடிக்க இருக்கிறார். இப்படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், இசையமைப்பாளர் இளையராஜா லண்டனில் இருந்து பாரிஸ் நகருக்கு ரெயில் பயணம் மேற்கொள்ளும் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் 'அக்னி நட்சத்திரம்' படத்தில் வரும் 'ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா' என்ற பாடல் பின்னணியில் ஒலிக்கிறது. இவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

1 More update

Next Story