படமான பாலியல் குற்ற உண்மை சம்பவங்கள்


படமான பாலியல் குற்ற உண்மை சம்பவங்கள்
x

பாலியல் ரீதியாக பெண்களை துன்புறுத்திய உண்மை சம்பவங்களை மையமாக வைத்து 'மெய்ப்பட செய்' என்ற படத்தை எடுத்துள்ளனர்.

தமிழ் திரையுலகில் உண்மை சம்பங்களை படமாக்க இயக்குனர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். நிறைய உண்மை சம்பவம் படங்கள் வந்துள்ளன. இந்த வரிசையில் பாலியல் ரீதியாக பெண்களை துன்புறுத்திய உண்மை சம்பவங்களை மையமாக வைத்து 'மெய்ப்பட செய்' என்ற படத்தை எடுத்துள்ளனர்.

பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் பலாத்காரங்களையும் அதை எப்படி தடுப்பது என்பதையும் படத்தில் சொல்லி உள்ளனர்.

நகரத்துக்கு பிழைப்பு தேடி வரும் பெண்ணை காமுகர்கள் சீரழிப்பதையும் பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகாரம் துணையாக இருப்பதையும் படத்தில் காட்சிப்படுத்தி உள்ளனர். வேலன் இயக்கி உள்ளார். பி.ஆர்.தமிழ்ச் செல்வம் தயாரித்துள்ளார்.

இதில் ஆதவ் பாலாஜி, மதுனிகா.ஜெயபாலன், ஓ.ஏ.கே.சுந்தர், ராஜ்கபூர். சூப்பர் குட் சுப்பிரமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


Next Story