மிருணாள் தாகூர் சம்பளம் ரூ.6 கோடி


மிருணாள் தாகூர் சம்பளம் ரூ.6 கோடி
x

துல்கர் சல்மான் ஜோடியாக 'சீதா ராமம்' படத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானவர் மிருணாள் தாகூர். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது.

சீதா ராமம் படத்துக்கு பிறகு மிருணாள் தாகூர் மார்க்கெட் உயர்ந்தது. அவருக்கு பல மொழிகளில் இருந்தும் பட வாய்ப்புகள் குவிந்தன. தமிழில் சூர்யாவின் 42-வது படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இன்னொரு தமிழ் படத்தில் நடிக்கவும் பேசி வருகிறார்கள்.

தெலுங்கில் நானி ஜோடியாக புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு மிருணாள் தாகூர் ரூ.6 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தென்னிந்திய சினிமாவில் நயன்தாராவுக்கு அடுத்து அதிக சம்பளம் பெறும் நடிகையாக மிருணாள் தாகூர் உயர்ந்துள்ளார்.

சினிமாவுக்கு வந்து குறுகிய நாட்களிலேயே மிருணாள் தாகூர் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்கி இருப்பது சக நடிகைகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story