'சிறந்த நடிகருக்காக மட்டும் அவரை பிடிக்கவில்லை...' - ஷாருக்கான் குறித்து நயன்தாரா பேச்சு


சிறந்த நடிகருக்காக மட்டும் அவரை பிடிக்கவில்லை... - ஷாருக்கான் குறித்து நயன்தாரா பேச்சு
x

image courtecy:instagram@nayanthara

தினத்தந்தி 7 April 2024 11:54 AM IST (Updated: 7 April 2024 11:58 AM IST)
t-max-icont-min-icon

நாம் அனைவரும் ஷாருக்கான் படத்தை பார்த்துதான் வளர்ந்தோம் என்று நயன்தாரா கூறினார்.

சென்னை,

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தமிழில் வசூல் ரீதியாக தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் அட்லீ. இவர் கடந்த வருடம் ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' படத்தை இயக்கினார். 'ஜவான்' படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

மேலும் தீபிகா படுகோனே, யோகிபாபு, பிரியாமணி, சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்தார். இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 'ஜவான்' திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் ரூ.1,160 கோடி வசூல் ஈட்டியது.

இந்நிலையில், ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்தது குறித்து நயன்தாரா கூறுகையில், ஷாருக்கான் ரசிகராக யார்தான் இருக்கமாட்டார். நாம் அனைவரும் அவர் படத்தை பார்த்துதான் வளர்ந்தோம். அவரை அனைவருக்கும் பிடிக்கும். சிறந்த நடிகருக்காக மட்டும் அவரை பிடிக்கவில்லை, அதற்குமேல் அவர் பெண்களை மிகவும் மதிப்பவர் என்பதற்காகவும்தான். இத்தனை வருடங்கள் சினிமாத்துறையில் பணியாற்றியுள்ளோம். எப்போது ஒரு படம் நன்றாக ஓடும் என்பது நமக்கு தெரியும். என்றார்.


Next Story